ரிதன்யாவின் தொகுப்புகள்

என் மற்றைய வலைப்பூக்களின் தொகுப்பு இது

தாயம் 1

கோடை வந்துவிட்டதன் அறிகுறியோ என்னவோ கடந்த வாரத்தில் எங்கள் பகுதி் குழாயில் சரியாக தண்ணீர் வரவில்லை.அதனால் ‘அட்டாலி’யில் கிடந்த வீட்டு சொந்தகாரரின் பெரிய அண்டாவில் நீர் நிரைத்துக் கொள்ள எடுத்தோம்.அதில் கிடந்த தட்டு முட்டு சாமானங்களுக்கு இடையில் , அட! பாண்டி(பல்லாங்குழி) அது கிளறிய ஞாபகத்தின் தாக்கம் இவ்விழை.தமிழ்நாட்டின் பல விளையாட்டுக்களை நாம் நம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதில்லை , எல்லா பிள்ளைகள் கையிலும் பொம்மை , வீடியோ கேம்.இன்னும் சில காலம் போனால் தமிழர்களுக்கு என்று விளையாட்டு ஏதும் இல்லை என்று சொன்னாலும் சொல்லிவிடுவார்கள்.அதனால் . நமக்கு தெரிந்த விளையாட்டுக்களை அதை விளையாடும் முறைகளை இங்கே பதிந்து வைப்போம் வாருங்கள்.

1.தாயம்

தாயம் எனப்படுவது பண்டைய காலத்திலிருந்து இன்று வரை இந்தியாவில் பரவலாக ஆடப்படும் ஒரு விளையாட்டாகும். இவ்விளையாட்டை இரண்டு முதல் நான்கு பேர் வரை தரையிலோ மேடை மீது வைத்தோ விளையாடலாம்.

வரலாறு

தாய விளையாட்டு மிகப் பழையதான விளையாட்டாதலால் முதலில் யார் கண்டுபிடித்தார்கள் என்னும் விவரம் தெரியாது.

தாயக் கட்டை

பொதுவாக தாயக் கட்டைகள் மரத்திலோ அல்லது வெண்கலம் போன்ற உலோகத்திலோ செய்யப்பட்டிருக்கும். மேலும் தாயக் கட்டைகள் நான்கு முகங்களைக் கொண்டிருக்கும். சில வகை தாயக் கட்டைகள் ஆறு முகங்களைக் கூடக் கொண்டிருக்கும். சில பகுதிகளில் குறிப்பாக 7×7 தாயக்கட்ட விளையாட்டில் புளியங்கொட்டைகளை உருட்டி விளையாடுவர். நான்கு முத்துக்களை ஒரு பக்கம் வெண்ணிறமாகும்படி பாறையில் தேய்த்து விடுவர். அவற்றில் ஒரு முத்தில் மட்டும் மறுபுறம் அரைகுறையாகத் தேய்க்கப்பட்டிருக்கும். பின்பு இவற்றை ஒரு தேங்காய்ச்சிரட்டையில்போட்டு உருட்டிவிடுவர். ஒன்று அல்லது இரண்டு முத்துக்கள் மட்டும் வெண்புறம்காட்டி விழுந்தால் விளையாடுபவர் அத்தனை இலக்கங்கள் நகர்த்த வேண்டும். மூன்று முத்துக்கள் வெண்புறம் காட்டி நான்காவது கருநிறம்காட்டினால் மூன்று இலக்கங்களும் நான்காவது அரைகுறை வெண்ணிறம் கொண்டிருந்தால் நான்கு இலக்கங்களும் நகர்த்தலாம். எல்லா முத்துக்களும் வெண்ணிறம் காட்டினால் ஆறு இலக்கங்களும் கருநிறம் காட்டினால் எட்டு இலக்கங்களும் கிடைக்கும். மீண்டும் ஒருமுறை உருட்டும் வாய்ப்பும் கிடைக்கும்.

நான்முக தாயக் கட்டை

நான்முக தாயக் கட்டையின் மூன்று பக்கங்களில் (1), (2) மற்றும் (3) புள்ளிகள் இருக்கும். ஒரு பக்கத்தில் புள்ளி ஏதும் இருக்காது (0). இரு நான்முக தாயக் கட்டைகளை உருட்டினால் 1, 2, 3, 4, 5, 6, 12 (0,0) ஆகிய எண்கள் விழும். 1, 5, 6, 12 எண்களை சிறப்பாகக் கருதி மறுமுறை தாயக் கட்டையை உருட்டுவது வழக்கம். இவ்வெண்கள் அடுத்தடுத்து மாறி மாறி விழுந்து கொண்டிருந்தால் அதை விருத்தம் என அழைப்பதுண்டு.

அறுமுக தாயக் கட்டை

அறுமுக தாயக் கட்டையின் எல்லாப் பக்கங்களிலும் புள்ளிகள் 1, 2, 3, 4, 5, 6 என பொறிக்கப்பட்டிருக்கும். இரு அறுமுக தாயக் கட்டைகளை உருட்டினால் 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 ஆகிய எண்கள் விழும்.

தாயக் கட்டம்

120px-Thayam

 

தாயக் கட்டம் (ஆறு x மூன்று)

 120px-Thayam3

தாயக் கட்டம் (ஏழு x ஏழு)

இந்தியாவில் ஒவ்வொறு பகுதியிலும் ஒவ்வொறு வகையாக கட்டங்களை அமைத்து தாயம் விளையாடப்படுகிறது. தென்னிந்தியாவில்

பெரும்பாலானோர் இரு வகைக் கட்டங்களை அமைத்தே விளையாடுகின்றனர். முதல் வகை தாயக் கட்டம் காய்களை வைக்கும் பகுதி உட்புறமாக நாற்புறமும் ஆறு x மூன்று கட்டங்கள் அமைக்கப்பட்டிருக்கும். இரண்டாம் வகை தாயக் கட்டம் ஏழு x ஏழு சதுரமாக அமைக்கப்பட்டிருக்கும். தாயக் கட்டத்தை வெறும் தரையில் வரைந்தோ அல்லது மரப் பலகையில் வரைந்தோ விளையாடப்படுகிறது.

விதி முறைகள்

 120px-Thayam2

தாயக் கட்டம் காய்களுடன் நகர்த்தும் முறை

 120px-Thayam4

தாயக் கட்டம் (இன்னொரு வகை) காய்களுடன் நகர்த்தும் முறை

பின்வரும் விதி முறைகள் நான்முக தாயக்கட்டையை கொண்டு 3x6 கட்டத்தில் விளையாடுவதற்கேற்றது:

 • இரண்டு முதல் நான்கு ஆட்டக்காரர்கள் ஆட்டத்தை துவக்கவேண்டும்.

 • ஒவ்வொரு ஆட்டக்காரரும் தனித்தனியான காய் வகைகளை தேர்வு செய்து கொள்ளவேண்டும். காய்கள் உருவத்திலோ அல்லது நிறத்திலோ வேறுபட்டு இருப்பது நல்லது.

 • ஆட்டக்காரர்கள் ஒவ்வொருவரும் ஆறு காய்களைக் மனைப் பகுதியில் வைத்து ஆட்டத்தைத் துவக்க வேண்டும்.

 • தாயம் இட்டபின்னேதான் மனையிலிருந்து முதற்கட்டத்தில் காய்களை வைக்க வேண்டும்.

 • காய்களை நகர்த்தும் திசையை மேலுள்ள வரைப்படத்தில் காணலாம் (பச்சைக் கோடுகள்).

 • ஒரு கட்டத்தில் ஒரு ஆட்டக்காரரின் காய்களே இருக்க முடியும். வேறு ஆட்டக்காரரின் காய்கள் அதே கட்டத்தில் நுழைந்தால் முதலிருந்த காய்கள் வெட்டப்பட்டு மனைக்கு திருப்பி அனுப்பப்படும்.

 • சில கட்டங்களின் குறுக்கே இரு கோடுகள் இருக்கும். இவை சிறப்புக் கட்டங்கள். இக்கட்டங்களில் பல ஆட்டக்காரர்களின் காய்களும் சேர்ந்து இருக்க முடியும்.

 • 1, 5, 6, அல்லது 12 ஆகிய எண்களுக்கு மறு ஆட்டம் உண்டு. பிறர் காய்களை வெட்டினாலும் மறு ஆட்டம் உண்டு.

 • காய்கள் ஒரு முறை சுற்றி வந்த பின் திரும்பவும் மனைக்குள் செல்லவேண்டும். ஆனால் வேறு ஆட்டக்காரரின் காய்களை முன்னமே வெட்டவில்லையென்றால் மனைக்குள் செல்ல முடியாது.

 • அவ்விதம் மனைக்குள் செல்ல முடியாத காய்கள் கடைசிக் கட்டத்திலேயே தங்கி விடும். சிலர் விதிமுறையை மாற்றி காய்களை சுற்றி சுற்றி வரவைப்பதும் உண்டு.

 • காய்கள் மனைப் பகுதியில் உள்ள கட்டத்துக்குள் ஏறிய பின் மீண்டும் மனைக்குள் புகுந்தால் அக்காய்களை "பழம்" என கருதி ஆட்டத்தில் இருந்து விலக்கி வைக்க வேண்டும்.

 • முதலில் எந்த ஆட்டக்காரர் ஆறு காய்களையும் பழமாக மாற்றுகிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவராவார்.

Advertisements

மார்ச்26, 2009 - Posted by | 1

4 பின்னூட்டங்கள் »

 1. நான் தான் மொத…

  சூப்பர்…நாங்க ௭௭ தான் விளையாடுவோம்..விடுமுறை வந்துட்டாலே தாயம் பைத்தியம் தான்…..இப்போவும் எலாரும் சேந்துட்டா ஒரே பழி வாங்கும் படலமா தான் இருக்கும்…சூப்பர் பதிவுங்க

  பின்னூட்டம் by நிலாவும் அம்மாவும் | மார்ச்27, 2009

 2. நன்றி நிலா,
  உண்மை இப்பொதுஇந்த இடங்களை கணினிபிடித்துக்கொண்டது.என் சிறுவயதிலும் வெறி கொண்டு விளையாடுவோம், என் தம்பி இதில் மிகவும் தேர்ந்தவன், இதில் கட்டை உருட்ட ஒரு ஆள், காய் நகர்த்த ஒரு ஆள் எனவும் ஆள் அதிகமாய் சேரும் காலங்களில் நடக்கும். அவனுக்கு பயந்து சிலர் விளையாட்டுக்கே வர பயந்த காலங்கள் உண்டு.

  பின்னூட்டம் by ரிதன்யா | மார்ச்27, 2009

 3. Very nice.
  Enjoyed reading.

  பின்னூட்டம் by ப்ரியா | ஏப்ரல்3, 2009

 4. ஆகா, நம்மூர்க்காரவுகதானா நீங்க? வாழ்த்துகள்!

  பின்னூட்டம் by பழமைபேசி | ஏப்ரல்4, 2009


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: